×

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் செல்போன்கள், உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ரூ.42,000 கோடி ஊக்கத்தொகை அளிக்க மத்திய அரசு திட்டம்

டெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் செல்போன்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மொத்தம் 42 ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கத்தொகை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவை மையமாக மாற்றுவதற்காக மேக் இன் இந்தியா திட்டம் செப்டம்பர் 25 தேதி 2014ல் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் அரசு - தொழில் துறையினரிடையே ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தால் இந்தியாவிற்கு மிகப்பெரிய முன்னேற்றம் கிடைத்துள்ளது. மேலும் டிஜிட்டல் கட்டமைப்பில் இந்தியாவின் தரமும் உயர்ந்து வருகிறது. தொடர்ந்து, உலகளவில் பல முன்னேற்றங்களையும், மாற்றங்களையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த திட்டம் மூலம் மோட்டார் வாகனம் மற்றும் மின்னணு பொருட்கள் தயாரிப்பின் முனையமாக இந்தியா மாறி வருகிறது.

இந்நிலையில் 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் செல்போன்கள், அதன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஆண்டு விற்பனை மதிப்பு உயர்வின் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு 5 ஆண்டுகளுக்கு மொத்தம் 42 ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. இதனால் அதிக விலை கொண்ட செல்போன்களை தயாரிக்கும், ஆப்பிள், சாம்சங், மைக்ரோமேக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பயனடையும். அதே நேரத்தில் மின்னணு கருவிகள் உற்பத்தியில், சீனா, வியட்நாம், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் வளர்ச்சியடையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Government ,Mack ,India ,makers ,manufacturers , Make in India, cell phones, spare parts, incentives, central government program
× RELATED இந்திய அரசு மருத்துவக்கல்லூரிகளில்...